நயன்தாராவை புகழ்ந்த ஒரு ரசிகை ! சூப்பர்

90

தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் தண்ணீர் பிரச்னை, தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் தண்ணீர் பிரச்னை. மூணு மாநிலங்களும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சதில்ல. ஆனா, இந்த மூன்று மாநிலங்களுக்கும் உயிர்நாடி ஒண்ணுதாங்க. அது நம்ம நயன்தாராதாங்க.

‘தேசிய நயன்தாரா இணைப்புத் திட்டம்’னு ஒண்ணு ஆரம்பிச்சு நயனை இந்திக்கும் கொண்டு போக முயற்சி நடக்குது. அப்புறம் வடக்கு மட்டும் வாழும், தெற்கு தேயும். அதுக்கு நம்ம ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் போராளிகள் இடம் கொடுக்கக்கூடாது. என்னதான் இருந்தாலும் நயன் எப்பவுமே நமக்கு மட்டுமே சொந்தம்.

அதனால்தான் அவர் தென்னிந்தியாவின் ’ஜொள்ளெண்ணத் தூதுவரா’ கடந்த பத்து வருஷமா நீடிச்சுக்கிட்டு வருகிறார்.

இப்போதைய ஹீரோயின்களில் பப்ளியாக இருந்தாலும், ஷேப்புக்கு வந்தாலும், எப்படிப் பார்த்தாலும் அழகா இருக்குறது நயன் மட்டும்தான். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் எங்க தேடினாலும், அனைத்து ஆங்கிள்களிலும் அழகா இருக்குறது நம்ம நயன் மட்டும்தான்.

‘ஐயா’ பட தாவணி நயனை அடிச்சுக்க இன்னமும் ஆளே இல்லை என்று இன்னமும் குமுறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் பல முன்னாள், இந்நாள் இளைஞர்கள்.

நடிகைக்கு திருமணம்னு செய்தியை கேள்விப் பட்டாலே கொடுத்த அட்வான்ஸைக்கூட திரும்பி வாங்காமல் தயாரிப்பாளர்கள் ஓடிவிடுவார்கள். ஆனால், நயன்தாராவைச் சுற்றி எத்தனையோ திருமண வதந்திகள் வந்தாலும் இன்னைக்கும் அவர்தான் ஃபீல்டில் நம்பர் 1. ஒவ்வொருமுறை திருமண வதந்தி கிளம்பி அடங்கும்போதும் நயனின் சம்பளம் அதிகமாகிறது.

சிம்பு கூட வாய்க்கா தகராறு, பிரபு தேவாவுடன் பிரிவு, உதயநிதியுடன் உரசல்னு எதுகை மோனையோடு கிசுகிசுக்கள் வந்தாலும் எதுவுமே நயனின் செல்வாக்கை மூன்று மொழிகளிலும் அசைச்சுகவே முடியாது.

நயன் நிறைய பேரை காதலிச்சிருக்காங்கனு பொத்தாம் பொதுவா விமர்சனம் செய்யும் ஆண்களிடம், ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்க ஆசைப்படுறேன். உங்களில் எத்தனை பேர் ஒரே ஒரு பொண்ணை மட்டும் காதலிச்சிருக்கிங்களோ, அவங்க மட்டும் நயனை விமர்சனம் செய்யுங்களேன்…!

இப்போ கிரவுண்டே காலியாகும் பாருங்களேன்! நயன் பச்சமண்ணு சார், இவ்ளோ பாராட்டி எழுதி இருக்கோமே… அதைப் படிக்கக்கூட தெரியாத குழந்தை சார்!

‘நானும் ரவுடிதான்’ படத்துல “என் போன் எப்ப கிடைக்கும்”னு நயன் அப்பாவியா கேட்குமே, அந்த மாதிரி, “எனக்கு நல்ல பாய் ஃப்ரெண்டு எப்ப கிடைப்பான்னு”தான் நயன் இன்னமும் தேடிக்கிட்டு இருக்கு. அதைப்போய் தப்பா பேசுறீங்களே? இப்போ கூட, நயன் விக்னேஷ் லவ்வுல ஏதாவது தகராறு வந்துட்டா, நமக்கு ஒரு சான்ஸ் கிடைக்காதான்னு க்யூவுல நிக்கிற பயகபூரா நம்ம ஹீரோஸ்தான்.

“பாஸ், இன்னைக்கி நான் லட்டரு குடுத்துக்குறேன், பில்லாவுல இருந்து ஃபாலோ பண்றேன் ப்ளீஸ்” என ஒரு புது ஹீரோ சொல்வதும், “டேய் நான் சந்திரமுகிலேர்ந்து வெயிட்டிங்’’ என இன்னொரு ஹீரோ சொல்வதுமாக போட்டி நீள்கிறது.

நவம்பர் 17 காதல் மன்னன் ஜெமினி கணேசன் பிறந்த நாள். மறுநாள் காதல் இளவரசி ந‌யன் பிறந்த நாள்… எவ்வளவு பொருத்தம் பாருங்க! நயன் பிறந்த நாளை தேசிய பேரின்ப நாளாக அறிவிக்க இதைவிட வேறு காரணமும் வேண்டுமா? சுருக்கமா சொல்றதுன்னா…

‘நானும் ரவுடிதான்’ நயன்தாரா நாமம் வாழ்க. ’இது நம்ம ஆளு’ நயன் புகழ் ஓங்குக. அம்புட்டுதேன்!