Primary Menu

Top Menu

அஜித்தை இன்ஸ்டாகிராமில் புகழ்ந்த விஜய்யின் மகன்?

சமூக வலைதளத்தில் அஜித் – விஜய் சம்பந்தப்பட்ட செய்திகள் என்றால் பெரும் வைரலாகப் பரவும். அதுவும் சமீபத்தில் விஜய் மகன் சஞ்சய் குறும்படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் வைரலாகப் பரவியது.

அதே போல, இன்று (அக்.12) காலை முதலே விஜய்யின் மகன் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார் என்று பல ஸ்கிரீன் ஷாட்கள் பரவின. இதில் ”விஜய்க்கு பிறகு யாரைப் பிடிக்கும்” என்பதற்கு ”அஜித் மற்றும் விஜய்சேதுபதி” என்றும், ”யாருடன் நடிக்க விருப்பம்” என்பதற்கு ”அப்பா, அஜித் மற்றும் விஜய் சேதுபதி” என்றும் பதில்கள் தெரிவிக்க, அது வைரலானது.

மேலும், ”தல பண்ற ஸ்பெஷல் பிரியாணி சாப்பிட்டுள்ளீர்களா” என்பதற்கு ”ஒரே ஒரு முறை.. அது வேற லெவல்” என்றும், ”தலயைப் பற்றி” எனக் கேட்டதற்கு ”கெத்தானவர்” என்றும் இன்ஸ்டாகிராமில் பதிலளித்திருக்கிறார்கள்

 

டுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் !!

பிக் பாஸ் லவ் ஜோடி ஆரவும் ஓவியாவும்...

Leave a Reply