விக்ரம் 58-ல் பிரியா பவானி ஷங்கர்…?

பார்வையாளர்களின் விமர்சனம் விக்ரம் 58-ல் பிரியா பவானி ஷங்கர்…? 0.00/5.00

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் “பிரியா பவானி ஷங்கர்”. இவர் தற்போது அருண் விஜய் நடிக்கும் ‘மாஃபியா” படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.


அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.