ஆடை படத்திற்காக பி.சுசீலா பாடிய பாடல் கடவுளின் ஆசீர்வாதம் – இயக்குநர்

பார்வையாளர்களின் விமர்சனம் ஆடை படத்திற்காக பி.சுசீலா பாடிய பாடல் கடவுளின் ஆசீர்வாதம் – இயக்குநர் 0.00/5.00


அமலா பால் தற்போது நடித்துள்ள படம் ஆடை.. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரில் அமலா பால், ஆடையின்றி நடித்துள்ளது கடும் சர்ச்சையானது.


ஆடை படத்திற்காக பி.சுசீலா, பக்தி பாடல் ஒன்றை பாடி உள்ள தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், ரத்ன குமார்.


ஏற்கனவே இப்படத்தின் 2 பாடல்கள் மற்றும் தீம் டிராக் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்து வெளியிட உள்ள சிங்கிள் டிராக் பாடல் பி.சுசீலா பாடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.


பி.சுசீலா பாடிய பக்தி பாடல் ரெக்கார்டிங் செய்யப்படும் போட்டோக்களை வெளியிட்டுள்ள ரத்ன குமார், ஆடை படத்திற்காக பி.சுசீலா பாடி உள்ளது தான் இப்படத்திற்கு கடவுளிடம் இருந்து கிடைத்துள்ள உண்மையான ஆசீர்வாதம் என குறிப்பிட்டார்.