Primary Menu

Top Menu

டாப்ஸி கதாபாத்திரத்தில் தமன்னா…?

2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘அனந்தோ பிரம்மா’. டாப்ஸி, வெண்ணிலா கிஷோர், ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும்.


இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், இதர மொழிகளில் ரீமேக்காகவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது டாப்ஸி நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.


தற்போது தமன்னாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு முடிந்தவுடன், அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று தெரிவித்தார்கள். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.