தர்பார் பட ஷீட்டிங்கில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்

பார்வையாளர்களின் விமர்சனம் தர்பார் பட ஷீட்டிங்கில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் 0.00/5.00


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்பார்’. இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா கதாநாகியாக நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


மும்பை படப்பிடிப்பில் இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஹேமங் பதானி நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளார். ரஜினியின் சந்திப்பு குறித்து பதானி தனது ட்விட்டர் பக்கத்தில், “அவர் எவ்வளவு எளிமையானவர், அடக்கமானவர் என்பதை மற்றவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.


இப்போது நானே நேரடியாகப் பார்த்தேன். அவரிடம் ஏதோ ஒரு விசேஷம் உள்ளது. தலைவர் ரஜினிகாந்த்துடன் இருந்த இரண்டு நிமிடங்கள் என் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்த்து மகிழ்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.


இதே போல் மும்பை படப்பிடிப்பில் இருதினங்களுக்கு முன் ரஜினிகாந்தின் மனைவியின் திடீரென ஷீட்டிங் ஸ்பாட்டிற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.