போலீசாக காரில் வந்து கலக்கிய ரஜினி..! மேலும் ஒரு வீடியோ லீக்

பார்வையாளர்களின் விமர்சனம் போலீசாக காரில் வந்து கலக்கிய ரஜினி..! மேலும் ஒரு வீடியோ லீக் 0.00/5.00

போலீசாக காரில் வந்து கலக்கிய ரஜினி..! மேலும் ஒரு வீடியோ வெளியிடு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆரம்பித்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாள் படப்பிடிப்பு ஆரம்பித்த உடனே மும்பை கல்லூரி மாணவர்கள் ரஜினி கிரிக்கெட் ஆடுவது போன்றும் அதை நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் வேடிக்கை பார்ப்பது போன்றும் புகைப்படம் வெளியிட்டு படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்தனர்.

அடுத்தடுத்து வரிசையாக ரஜினியின் புகைப்படங்கள் வெளியாகி மேலும் படக்குழுவை அதிர்ச்சியாக்கினார்கள். தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ரஜினி போலீஸ் கெட்டப்பில் காரில் இருந்து இறங்கி ரசிகர்களை சந்தித்து இருக்கிறார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.