தர்பார் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்

பார்வையாளர்களின் விமர்சனம் தர்பார் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் 0.00/5.00

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் “தர்பார்”. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.


லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் திருநங்கை ஜீவாவும் இணைந்துள்ளார். இவர் விஜய்சேதுபதியின் தர்மதுரை படத்தில் நடித்தவர்.


இதனை தொடர்ந்து தற்போது தர்பார் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பிரதீக் பாப்பர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஹிந்தி ரீமேக்கான “ஏக் தீவானா தா” உட்பட பல ஹிந்திப் படங்களில் நடித்தவர்.