கமல்ஹாசனின் அடுத்த படைப்பில் புதிய ஹீரோ இவர்தானாம்..

47

தமிழில் பிக்பாஸ் 3 இறுதிப் போட்டியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற தர்ஷன் புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கவிருப்பதாக கமல் அறிவித்தார். இந்நிலையில் நேற்று புதிய ராஜ்கமல் அலுவலகம் திறக்கப்பட்டது.

விழாவில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலையை ரஜினியும் கமலும் இணைந்து திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் பேசிய கமல், “ராஜ்கமலின் 50 வது படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளோம். அதில் நான் நடிக்கவேண்டும் என்பதில்லை. அந்த அளவிற்கு ராஜ்கமலை நீங்கள் வளர்த்திருக்கிறீர்கள் என்று பேசினார்.

ஏற்கனவே ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் தர்ஷன் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்”. இந்நிலையில், ராஜ்கமலின் 50வது படம் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.