பொன்னியின் செல்வனில் இணைந்த ஜெயம் ரவி மகன் ஆரவ் கூட்டணி

பார்வையாளர்களின் விமர்சனம் பொன்னியின் செல்வனில் இணைந்த ஜெயம் ரவி மகன் ஆரவ் கூட்டணி 0.00/5.00

இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படைப்பான பொன்னியின் செல்வன் படத்திற்கான நடிகர்கள் ஒவ்வொருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த தமிழ் இலக்கிய கதையில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர்.

ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் பச்சன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. மேலும் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, அனுஷ்கா , கீர்த்தி சுரேஷ், மோகன் பாபு உள்ளிட்டோர் பலர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

டிக் டிக் டிக் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய ரோலில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஒரே படத்தில் தந்தையும் மகனும் சேர்ந்து நடிப்பது இது 2வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.