ஜூலை 26ல் “எனை நோக்கி பாயும் தோட்டா”

தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்ப்பில் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் கிடப்பில் இருக்கும் படம் “எனை நோக்கி பாயும் தோட்டா”. இப்படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் முடிந்த நிலையில், தணிக்கை குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது.


ஆனால், இப்படம் இன்னும் திரைக்கு வராமல் சில பைனான்ஸ் பிரச்சனை காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்நிலையில், இப்படத்தை வருகிற ஜூலை 26ஆம் தேதி வெளியிடபோவதாக அறிவித்துள்ளனர்.