Primary Menu

Top Menu

பிக்பாஸ் – ஐஸ்வர்யாவை காப்பாற்ற தன்தலைமுடியை சிவப்பாக்கிக் கொண்ட சென்றாயன்

நாமினேசனிலிருந்து ஐஸ்வர்யாவை காப்பாற்ற சென்றாயன் தனது தலையை சிவப்பாக்கிக் கொண்டுள்ளார்.

 

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. இந்த வாரம் வெளியேற்றும் படலத்துக்கு ஐஸ்வர்யா, ஜனனி, மும்தாஜ், விஜயலட்சுமி மற்றும் சென்றாயன் ஆகிய 5 பேரின் பெயர்கள் இறுதிசெய்யப்பட்டன.

 

இதையடுத்து இதில், அவரவர் தங்களை காப்பாற்றிக் கொள்ள தங்களுக்கு கொடுத்துள்ள டாஸ்க்குகள் மூலம் மற்றவர்களை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும். அதன்படி, இன்று போன் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

 

இதில் முதலில் ஐஸ்வர்யா சிக்கிக் கொண்டார். இவரது போட்டிக்கு அப்பாவியான சென்றாயன் மாட்டிக்கொண்டார். சென்றாயனிடம் உங்களது தலையை ரெட்டாக்கிக் கொண்டால், நீங்கள் நாமினேஷனிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள் என்றார்.

 

இதனை நம்பி ஏமாந்த சென்றாயன் முதலில் ஒப்புக்கொண்டார். ஆனால், அதன் பிறகு உண்மை நிலவரம் தெரியவர அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply