Primary Menu

Top Menu

படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்

படப்பிடிப்பின் போது நடிகர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் குஞ்சு முகமது (69). சிறு வயதியலேயே நாடகங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடினார்.

 

தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். பின் கேரளா சென்ற அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

மேலும் பிரபல மலையாள இயக்குநர் கமல் அவர் இயக்கும் படங்களில் குஞ்சு முகமதுவிற்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தார். இயக்குநர் அவருக்கு நெருக்கமான உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கும் படத்தில் நடித்து வந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் பதற்றமடைந்த படக்குழுவினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அவரை மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குஞ்சு முகமதுவின் மரணம் கேரள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Leave a Reply