Primary Menu

Top Menu

‘‘ஜோதிகா மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு’’ –சிம்பு

ராதாமோகன் டைரக்‌ஷனில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி’ படத்தில், சிம்பு கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். விதார்த், லட்சுமி மஞ்சு ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில், ‘ஹலோ எப்.எம்.’ ரேடியோவின் நிகழ்ச்சி தொகுப்பாளராக ஜோதிகா நடித்துள்ளார். அவருடன் சினிமா நட்சத்திரமாக சிம்பு தோன்றும் காட்சி, ‘ஹலோ எப்.எம்.மில் படமாக்கப்பட்டது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்படி, சிம்புவிடம் டைரக்டர் ராதாமோகன் கேட்டதும், நடிக்க சம்மதித்தார்.
இதுபற்றி சிம்புவே கூறுகிறார்:–
‘‘காற்றின் மொழி படத்தில் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை ராதாமோகன் சொன்னதும், அந்த காட்சிகள் அனைத்தும் எனக்கு பிடித்து இருந்தது. ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவதில் மகிழ்ச்சி. அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. ‘‘கண்டிப்பாக நடிக்கிறேன்’’ என்று கூறி, நடித்துக் கொடுத்தேன்.’’

Leave a Reply