Primary Menu

Top Menu

பிக்பாஸ் கலகல – மும்தாஜ்…ஐ மிஸ் யூ – அடி வாங்கும் மகத்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகர் மஹத் மீது ரம்யா தனது கோபத்தையும் பாசத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து 8-வது போட்டியாளராக கடந்த வாரம் வெளியேறினார் நடிகர் மஹத். பிக்பாஸ் வீட்டிலிருந்த போது யாஷிகாவுடன் மலர்ந்த காதல், மும்தாஜுடன் அவர் நடந்து கொண்டவிதம் ஆகியவற்றை பலரும் விமர்சித்து வந்தனர்.

 

நிகழ்ச்சியிலிருந்து மஹத் வெளியேறும் போது அவர் மீது யாரும் தனிப்பட்ட முத்திரை குத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

 

இதையடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மஹத்தை கன்னத்தில் அறைந்து நடிகர் சிம்பு வரவேற்றார். இந்நிலையில் மஹத்துக்கு முன்பே பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறிய ரம்யாவை மஹத் சந்தித்துள்ளார்.

 

அப்போது முடியை பிடித்து ரம்யா பாசமாக அவரை அடித்துள்ளார். அதற்கான வீடியோவை, அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்ற பழமொழியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரம்யா வெளியிட்டுள்ளார்.

 

அதில் ’ஐ மிஸ் யூ மும்தாஜ்’ என்று மஹத் கூறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

 

Leave a Reply