Primary Menu

Top Menu

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மகத்.. கன்னத்தில் அறைந்த சிம்பு!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மகத்துக்கு விளையாட்டாக கன்னத்தில் அறைந்து நடிகர் சிம்பு வரவேற்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து 8 வது போட்டியாளராக வெளியேறிய மஹத் கமல்ஹாசனிடம் பேசுகையில் தன்னை பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பிய நடிகர் சிம்புவுக்கு நன்றி தெரிவித்தார்.  மஹத் மீது யாரும் தனிப்பட்ட முத்திரை குத்த வேண்டாம் என்று மக்களிடம் வலியுறுத்தினார் கமல்ஹாசன்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மகத்துக்கு சிம்பு அதிரடியான வரவேற்பு கொடுத்துள்ளார்.

“பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய என்னை எனது உயிர் நண்பர் சிம்பு இப்படிதான் வரவேற்றார். லவ் யூ டா!” என்று கூறியுள்ளார். அந்த ட்வீட்டில் சிம்பு, மகத் கன்னத்தில் பட்! பட்! என்று அறைந்துவிட்டு கட்டியணைத்துக் கொள்ளும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.

காயத்ரி ரகுராம் மகத்துக்கு ஆதரவாக ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், “தைரியமாக இருங்கள் மகத்! பிக்பாஸ் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி மட்டுமே, வாழ்க்கை அல்ல! உங்களுடைய உண்மையான நண்பர்கள் வெளியேதான் இருக்கிறார்கள். உங்களுடைய திறமையும், எதிர்காலமும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. பிக்பாஸ் ஒரு மேடை, அது உங்களுக்கு சரியாக அமையவில்லை என்றால் எப்போதும் இரண்டாம் வாய்ப்பு இருக்கிறது. இது முடிவல்ல! என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply