Primary Menu

Top Menu

மீண்டும் ஒருமுறை பன்முக திறமை நடிகையாக நிரூபித்த அனுஷ்கா ஷர்மா!

நடிகை அனுஷ்கா ஷர்மா மேக்கப் இல்லாமல் 20 நிமிடத்தில் படப்பிடிப்புக்கு தயாராகிய சம்பவம் நடந்துள்ளது.

 

வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ‘சுய் தாகா’ படத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளனர். 2018-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் இப்படம் அமைந்துள்ளது.

 

மேலும் தேசிய விருது வெற்றிக் கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். மணீஷ் சர்மா இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

 

ஒரு எளிமையான பெண் தன் சொந்த தொழில் மூலமாக முன்னேறுகிறார் என்ற கருத்தினை அனுஷ்காவின் கதாபாத்திரம் கொண்டது.

 

நடிகர் வருண் தவான் மௌஜி என்ற கதாபாத்திர பெயரிலும், அவருக்கு மனைவியாக மம்தா என்ற கதாபாத்திர பெயரில் அனுஷ்கா நடித்துள்ளார்.

 

“பன்முக திறமையுள்ள நடிகை அனுஷ்கா ஷர்மா அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்த சுய் தாகா படத்திற்காக மேக்கப் செய்யாமல் தயாராகியுள்ளார்.

 

படத்தில் ஒரு அமைதியான மற்றும் எளிமையான கைத்தறி தொழில் செய்யும் பெண்ணாக அனுஷ்கா நடித்துள்ளார்” என ஆடை வடிவமைப்பு இயக்குனர் தர்சன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply