Primary Menu

Top Menu

அஜித்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் கை கோர்க்கும் சிவா

அஜித்தின் விஸ்வாசம்’ படத்துக்கு பின் அல்லு அர்ஜுன் படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளார்.

 

கார்த்தியை வைத்து ‘சிறுத்தை’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா.

 

அதையடுத்து அஜித்தை வைத்து ‘வீரம்’ அடுத்ததாக ‘வேதாளம்’ ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர். பின் மூன்றாவதாக மீண்டும் அஜித்தை இயக்கிய ‘விவேகம்’ தோல்வியடைந்தது.

 

இருந்தாலும் அஜித், சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் நடிக்கிறார்.

 

இந்நிலையில் இப்படத்துக்கு பின் இயக்குனர் சிவா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply