Primary Menu

Top Menu

இணையங்களில் வைரலாகும் தியாசூர்யாவின் கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்

நடிகர் சூர்யாவின் மகள் தியா கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து மணமுடித்தார். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.

 

திருமணம் முடித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவ்வப்போது ஒரு சில படங்களில் ஜோதிகா நடித்து வருகிறார்.

 

பள்ளிப்படிப்பை பயின்று வரும் தியா விளையாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வரும் தியா, கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார்.

 

ஏற்கெனவே மாநில அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற தியா, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கைகளில் கோப்பையை வாங்கியுள்ளார்.

 

இந்நிலையில் தற்போது கிரிக்கெட் பயிற்சியாளர் ஒருவரிடம் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

 

இந்த வீடியோவை சூர்யாவின் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பலர் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply